Blog

பூமியைப் பற்றிய உன்மைகள்

பூமியின்‌ சில உன்மைகள் (Facts about Earth):

நமது பூமி (Earth) சூரியனிடமிருந்து மூன்றாவது கோள் ஆகும், இது தோராயமாக 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானது மற்றும் தற்போது பூமி மட்டுமே உயிர்வாழ ஏற்ற கோளாக அறியப்படுகிறது.

 தோற்றம்:

பூமத்திய ரேகை: 12,756 கிமீ
துருவ விட்டம்: 12,714 கிமீ
மாஸ்: 5.97 x 10 ^ 24 கிலோ
நிலவு: 1 (சந்திரன்)
சுற்றுப்பாதை தூரம்: 149,598,262 கிமீ (1 AU)
சுற்றுப்பாதையின் காலம்: 365.24 நாட்கள்
மேற்பரப்பு வெப்பநிலை: -88 முதல் 58 டிகிரி செல்சியஸ்

பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது.

இது கிட்டத்தட்ட மிக நுட்பமாக நடைபெறுகிறது, அதாவது நூறு வருடங்களுக்கு சராசரியாக 17 மில்ல செகன்ட் குறைகிறது, சீராக இல்லாவிட்டாலும் ஏறத்தாழ நடைபெறுகிறது. இதன் காரணமாக ஒரு நாளின் நீளமானது நீட்டிக்கப்பட்டும், ஆனால் மிகவும் மந்தமாக நடைபெறும், சொல்ல போனால் 140மில்லியன்‌ ஆண்டுகளுக்கு பின்பு தான் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்.

பிரபஞ்சத்தின் மையம் பூமி என நம்பப்பட்டது.

பண்டைய விஞ்ஞானிகளின் கணிப்பின்படி பூமியே நம் பிரபஞ்சத்தின் மையம் என நம்புகிறேன், சூரியன் மற்றும் கோள்கள் அனைத்தும் பூமியையே சுற்றி வருவதாக நினைத்தார்கள், கால போக்கில் சூரியன் மையம் என ஒருவர் கண்டறிந்தார் ஆனால் அதுவும் கூட தவறே.

காந்த புலம் அதிகம்.

பூமியின் மையப்பகுதியில் உள்ள நிக்கல் அயர்ன் காரணமாக காந்தி புலம் ஏற்படுத்தப்படுகிறது. காந்தப்புலன் காரணமாக நம் பூமி, சூரிய காற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு ஒரே ஒரு இயற்கை துணைக்கோள் உள்ளது.

நாம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை பூமிக்கு மேற்பரப்பில் அனுப்பியுள்ளோம் ஆனால் பூமி இயற்கையாகவே கொண்ட ஒரே ஒரு துணை கோள் நிலா. நிலவு பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை சுற்றிவர ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறது.

நமது பூமி அதிக அடர்த்தி கொண்டது.

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களுடன் ஒப்பிடும் போது பூமியான அதிக அடர்த்தி கொண்டது, உதாரணமாக பூமியின் மைய உலகமயமானது மேல் அடுக்கை விட அதிக அடர்த்தி உடையது, பூமியின் சராசரி அடர்த்தி (Density) தோராயமாக 5.52கிராம் / கனசென்டிமீட்டர்.

அறிந்தும் அறியாதவை:

– 70% பூமி நீரால் சூழப்பட்டுள்ளது.

முதன் முதலில் நான் விண்வெளி வீரர்கள் மேலிருந்து நம் பூமியைப் பார்க்கும் போது அவர்களுக்கு நீல வண்ணம் காட்சி அளித்தது, அதனால் அவர்கள் நமது பூமியை நீலக்கோள் என்று அழைத்தார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை நமது பூமி 70% நீராலும் மீதமுள்ள 30% மட்டுமே கடல் மட்டத்திலிருந்து உயர்ந்துள்ளது.

பூமி பெரும்பாலும் இரும்பு, ஆக்சிஜன் மற்றும் சிலிக்கனால் ஆனது. 

பூமியை தனித்தனி பொருட்களாக பிரித்து வைத்தால் 32.1% இரும்பு, 30.1% ஆக்ஸிஜன்,15.1% சிலிக்கான் மற்றும் 13.9% மெக்னீசியம் கிடைக்கும். பெரும்பாலான இருந்து பூமியின் மையப்பகுதியில் உள்ளது, ஆக்ஸிஜன் பெரும்பாலும் பூமியின் மேற்பரப்பிலும்‌ உள்ளது.

பூமியை அதன் அச்சில் சுழற்றுவதற்காக 24 மணிநேரம் ஆகாது. 

பூமியை அதன் அச்சை சுற்றி சுழற்றுவதற்கு எடுக்கும் நேரம் உண்மையில் 23 மணி நேரம், 56 நிமிடங்கள் மற்றும் 4 விநாடிகள்.

பூமியில் ஒரு வருடம் 365 நாட்கள் அல்ல.

இது உண்மையில் 365.2564 நாட்கள். மீதமுள்ள கால் நாளை சேர்ப்பதற்காக லீப் வருடமாக 4 வருடத்திற்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளாக சேர்க்கிறோம். (2008, 2012..)

– 1 % நீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்

பூமியில் உள்ள மொத்த நீரில் வெறும் 3% மட்டுமே நல்ல குடிநீர், மீதமுள்ள 97% உப்பு நீராக உள்ளது. நல்ல நீரான 3 சதவீதத்தில் 2 சதவீதம் பனிக்கட்டி. ஆக மொத்தத்தில் நம் வெறும் 1 சதவீத நீரை மட்டுமே ஏரி, குளம், ஆறு, நிலத்தடியில் இருந்து பெற்று பயன்படுத்தி வருகிறோம்.

– உலகின் 30% நிலப்பரப்பு ஆசியாவில் உள்ளது, ஆனால் ‌60% மக்கள் தொகையை கொண்டது.

– ஒவ்வொரு குளிர்காலத்திலும் சுமார் 1 செக்டில்லியன் (1, 000, 000, 000, 000, 000, 000, 000 அல்லது ஒரு டிரில்லியன் டிரில்லியன்) பனிப் படிகங்கள் வானத்திலிருந்து விழுகின்றன.

Facebook Comments