Blog

நிலவைப் பற்றிய உன்மைகள்

நிலவின் ஒரு சில உண்மைகளைக் காண்போம் (Facts about Moon): நிலவு (The Moon), பூமியின் இயற்கை துணைக் கோளாக உள்ளது, இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானது, அதாவது சூரிய மண்டலம் உருவாகி 30-50 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்பு.

நிலா பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. நிலவிற்கு முதல் ஆளில்லா விண்கலம் 1959 ஆண்டு அனுப்பப்பட்டது, அதனை தொடர்ந்து அப்பல்லோ 11, 1969 ஆண்டு ஆட்களுடன் அனுப்பப்பட்டது.

தோற்றம்:

விட்டம்: 3,475 கிமீ
நிறை (Mass): 7.35 × 10 ^ 22 கிலோ (0.01 புவி)
பாதை: பூமி
சுற்றுப்பாதை தூரம்: 384,400 கிமீ
சுற்றுப்பாதையின் காலம்: 27.3 நாட்கள்
மேற்பரப்பு வெப்பநிலை: -233 முதல் 123 ° C
சந்திரனில் இருந்து பூமியின் சராசரி தூரம்: 384403 கிலோமீட்டர் (238857 மைல்கள்) ஆகும்.

– மூன் ஹ்யூஜென்ஸ் என்பது சந்திரனில் மிக உயரமான மலை, இது 4700 மீட்டர் உயரம் (மவுண்ட் எவரெஸ்ட் 8848 மீ).

– பூமியைவிட சந்திரன் மிகவும் பலவீனமான புவியீர்ப்புத் தன்மை உடையது, எனவே நமது எடை பூமியில் இருப்பதை அங்கு குறைவாக இருக்கும்.  (16.5% மட்டுமே)

– பூமியின் அலைகள் பெரும்பாலும் நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படுகின்றன.

– ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும், பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்திரன்  சிறிய அளவிலான தண்ணீரைக் கொண்டுள்ளது  என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

– 1969 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா அப்போலோ 11,  முதன்முதலாக மனிதர்களை நிலவில் கால்பதிக்க வைத்தது.

– நிலவில் கால் வைத்த முதல் நபர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.

– இந்தியாவில் இருந்து 2008 அக்டோபர் மாதம் “சந்திராயன்-1″ என்று செயற்கைகோள்களை முதல் முறையாக வெற்றிகரமாக அனுப்பியது இந்தியா.

– சோவியத் யூனியனின் லூனா திட்டம் : 1966 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் முதல் ஆளில்லாத விண்கலத்தை  வெற்றிகரமாக இறக்கியது.

– சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற துணைக்கோள்களுடன் ஒப்பிடும் போது சந்திரன் ஐந்தாவது பெரிய கோளாகும்.

– சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போதும், பூமியின் நிழல் சந்திரன் மீது படும்(அதாவது சூரிய ஒளி சந்திரனில் படாமல் பூமி மறைக்கும்), இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். அதேபோல் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரியன், சந்திரனால் மறைக்கப்பட்டால் அதை சூரிய கிரகணம் என்று அழைப்பார்கள்.

நிலவின் இருண்ட பகுதி என்பது கட்டுக்கதை.

உன்மையில் நிலாவில் இருண்ட பகுதி என்பது கிடையவே கிடையாது, சூரிய ஒளியானது நிலவின் அனைத்து இடங்களிலும் படுகிறது. நம் பூமியில் இருந்து நிலைவை பார்க்கும்போது ஒரு பக்கம் மட்டுமே ‌தெரியும், ஆதலால் அதன் பின் பகுதி எப்போதும் இருட்டாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர். (உதாரணமாக பூமியில் அமாவாசை அன்று, நிலவின் பின் பகுதியில் முழு பௌர்ணமி ஆக இருக்கும்)

சந்திரனில் வளிமண்டலம் கிடையாது.

எனவே‌ இங்கு ஒலிகளை கேட்க முடியாது மற்றும் வானம் கருப்பாக தெரியும். நிலவின் மேற்பரப்பு காஸ்மிக் கதிர்கள், வின் கற்கள், சூரிய காற்றில் இருந்து பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் அதிக அளவிலான வெப்பநிலை வேறுபாடு ஏற்படும்.

நிலவில் கால்பதித்த வர்கள் 12 பேர் மட்டுமே: அனைவரும் அமேரிக்கர்கள்.

கடைசியாக “ஜீன் செர்னான்” 1973 ல் அப்பலோ 17 மூலம் சந்திரனுக்கு பயணித்தார். அதன் பிறகு ஆளில்லா விண்கலம் மட்டுமே அனுப்பப்பட்டது.

சந்திரன் பூமியிலிருந்து விலகி செல்கிறது.

வருடத்திற்கு தோராயமாக சுமார் 3.8 சென்டிமீட்டர் நமது புவியில் இருந்து விலகி செல்கிறது. இது 50 பில்லியன் வருடங்களுக்கு நடந்தால் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுத்து கொள்ளும் காலம் 47 நாட்களாக மாறும். தற்போது ஒருமுறை சுற்றிவர 27.3 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

Facebook Comments