Blog

சூரியனைப் பற்றிய உண்மைகள்

சூரியன் (The Sun), பெரும்பாலானோருக்கு தெரிந்த வரை தெய்வமாகவும், கிழக்கே உதித்து மேற்கே மறைந்து பூமியில் இரவு பகலை மாற்றி அமையக்கூடிய வேலையை செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் நமது பூமி உயிரோட்டமாக இயங்க முதல் முக்கியமான காரணம் சூரியன்.

சூரியனை மூலமாக வைத்தே பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தாவரங்களும் இயங்குகிறது, இங்கு நாம் சூரியனைப் பற்றி அறிந்தும் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகளை காண்போம்.

தோற்றம்:

வயது: 4.6 பில்லியன் ஆண்டுகள்
வகை: மஞ்சள் குறுமீன் (G2V)
விட்டம்: 1,392,684 கிமீ
மத்திய ரேகை: 4,370,005.6 கிமீ
நிறை: 1.99 × 10 ^ 30 கிலோ (333,060 புவி)
மேற்பரப்பு வெப்பநிலை: 5,500 ° C

விரைவான உண்மைகள்: (Fast facts about Sun)

  • சூரியனின் மையப்பகுதி வெப்பநிலையானது சுமார் 15 மில்லியன் டிகிரி செல்சியஸை அடைகிறது (15,000,000°c)
  • அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது இது நம் கண்களுக்கு வெள்ளையாகத் தெரியும்.
  • பெரும்பாலும் ஹைட்ரஜன்‌ (70%) மற்றும் ஹீலியம் (28%) ஆகியவற்றை கொண்டுள்ளது.
  • சூரியன் G2V வகையை சார்ந்த முக்கிய நட்சத்திரம் மற்றும் மஞ்சள் குறுமீன் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 4.6 பில்லியன் வருடம் பழமையானது.
  • பூமியை விட 3 லட்சத்து 30 ஆயிரம் மடங்கு பெரியது.

விரிவான உண்மைகள்: 

இலட்சக்கணக்கான பூமியை சூரியனுக்குள் பொருத்த முடியும்.

உதாரணமாக சூரியனின் உள்பகுதியில் வெற்றிடமாக இருப்பின் அதற்குள் 9 லட்சத்து 60 ஆயிரம் கோள வடிவ பூமியை அடைக்க முடியும், அதேபோல் சிறிய இடம் கூட இல்லாமல் பூமியை அடைத்தால் 13 லட்சம் பூமிகளை அடைக்க முடியும்.

சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 86% சூரியன்.

சூரியனின் நிறையானது பூமியை‌ விட தோராயமாக 330,000 மடங்கு அதிகம், அதில் கால் பங்கு ஹைட்ரஜன் மற்றும் மீதமுள்ள பெரும்பங்கு ஹீலியமை நிறையாக கொண்டுள்ளது.

மிக துள்ளியமான கோளம்.

இதன் துருவ விட்டம், வளிமண்டல விட்டத்தோடு ஒப்பிடும்போது வெறும் 10கிலோ மீட்டர் மட்டும் வித்தியாசம் உள்ளது.

மைய வெப்பநிலை 15 மில்லயன் டிகிரி செல்சியஸ்‌ வரை அடையும்.

ஆற்றலானது அனுகரு இணைவு (nuclear fusion) மூலம் உருவாகிறது. பொதுவாக சூடான பொருட்கள் விரிவடையும், சூரியனில் ஈர்ப்பு விசை இல்லையென்றால் ராட்சச வெடிப்பாக இருக்கும். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் 5,600°C வரை அடையும்.

பூமியை விழுங்கும்.

சூரியனில் உள்ள அனைத்து ஹைட்ரஜன் எரிந்த பிறகும் கூட 130மில்லியன் வருடம் தொடர்ந்து எரியும், ஹீலியம் எரியும் போது புதன், வெள்ளி மற்றும் பூமி வரை சிவப்பு ராட்சச பந்தாக விரிவடையும்.

சூரியன்பூமியின் அளவிற்கு மாறுபடலாம்.

சிவப்பு ராட்சச கட்டத்திற்கு பிறகு முற்றிலும் சிதைவடைந்து விடும், மீதமுள்ள நிறையானது நமது கோள்களின் அளவுக்கு இருக்கும், இதை வெள்ளை குறுமீன் என்று அழைக்கப்படும்.

சூரிய ஒளி‌ பூமியை அடைய 8 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.

பூமியில் இருந்து சூரியன் சராசரியாக 150மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒளியானது நொடிக்கு 300,000 கிலோ மீட்டர் (299792 km/s)  பயணம் செய்யும், அதன்படி தோராயமாக 500 நொடிகள் (8 நிமிடம் 20 நொடிகள்) எடுத்து கொள்ளும்.

சூரியனுக்கு நடுத்தர வயது.

ஏறத்தாழ 4.5 பில்லியன் வருடம் பழமையானது, ஏற்கனவே இது தக்கவைத்துள்ள ஹைட்ரஜனில் பாதி‌ அளவு எரித்து விட்டது, மீதம் உள்ள ஹைட்ரஜன் அளவானது இன்னும் ஐந்து பில்லியன் வருடங்களுக்கு போதுமான அளவு உள்ளது. தற்போது சூரியனின் வகையை மஞ்சள் குறுமீன் என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் மிக வலுவான காந்தப்புலத்தை கொண்டுள்ளது.

சூரியனில் ஏற்படும் காந்த புயல் காரணமாக அதிகமான வெளிச்சத்தை வெளியிடுகிறது, இவை சூரியனில் திசைதிருப்பட்டு சுழல்கிறது. இது நம் பூமியில் ஏற்படும் சூறாவளி போல் காட்சியளிக்கும்.

சூரியன் நொடிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

விண்மீன் (பால் வழி) மண்டலத்தில் இருந்து சூரியன் 24,000-26,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது, எனவே சூரிய மண்டலம் விண்மீன் மண்டலத்தின் சுற்றுப்பாதையை ஒருமுறை கடக்க சுமார் 225 முதல் 250 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என கணக்கிடப்படுகிறது, இதன்‌ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை 20-25 முறை விண்மீன் மண்டலத்தை சூரியன்  சுற்றி வந்துள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு ஆண்டு முழுவதும் மாறுபடும்.

ஏனென்றால் புவி நீள் வட்ட பாதையில் சூரியனை‌ சுற்றி வருகிறது, இதனால் இடைப்பட்ட தொலைவு 147 முதல் 152 மில்லியன் கிலோமீட்டர் வரை மாறுபடுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவை வானியல் அலகு (AU) என்று குறிப்பிடப்படுகிறது.

கோள்கள்

Facebook Comments