Blog

ட்ரூ காலர் (TrueCaller) பற்றிய விளக்கம்

TrueCaller என்பது இணையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு செயலி (App) மற்றும் இணையதளம். இது உங்களுக்கு தெரியாதா எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அந்த எண்ணை பயன்படுத்துபவரின் பெயரை உங்களுக்கு காட்டுகிறது, அது மட்டும் அல்ல தொந்தரவு தரக்கூடிய அழைப்புகளை Spam Report அடிப்படையில் தானாகவே துண்டிக்கும் வசதியை கொண்டது.

நம் நன்பர்களின் தொலைபேசி எண்களை சேமிக்காமல் விட்டுவிட்டால் கூட அவர் எண்ணை உங்களது Truecaller ல் அவருடைய பெயருடன் காட்டும்.

எவ்வாறு இயங்குகிறது? சரி பெயர் எப்படி அந்த Truecallerகு தெரியும்?

நாம் சிம் கார்டு வாங்கும் போது தரும் தகவல் மூலம் பெயரை எடுக்கிறார்களா? கண்டிப்பாக இல்லை, அந்த தகவல்களை நாம் தான் தருகிறோம். ஒரு உதாரணம்: நான் ‌Trucaller பயன்படுத்துகிறேன் அப்போது அதில் என் பெயர், மின் அஞ்சல் போன்றவற்றை தருகிறேன் அந்த தகவல்களை மற்ற Truecaller பயனர்களுக்கு நான் அழைக்கும் போது என் பெயரை அவர்களுக்கு காட்டும், அதே போல் மற்ற பெயர்களும் அனைவருக்கும் காட்டும்.

அது சரி நான் தான் சாதாரண கைபேசி பயன்படுத்துகிறேன் என்னிடத்தில் அந்த App இல்லை எண் பெயர் எப்படி அதில் காட்டுகிறது?

கண்டிப்பாக உங்கள் நெம்பர் Truecaller பயன்படுத்தி வரும் ஒருவரிடமாவது இருக்கும், அதில் உங்கள் பெயரை என்னவென்று சேமித்து வைத்து உள்ளாரோ அந்த பெயரை எடுத்து மற்றவர்களுக்கு காட்டும். ஆம், பெயரை மற்றவர்கள் சேமித்து வைத்து இருக்கும் Contact Listல் இருந்து எடுத்து தான் மற்றவர்களுக்கு காட்டுகிறது, இதற்கான அனுமதியை நாம் இதை நிறுவும் போது தருகிறோம்.

மேலும்:

Facebook Comments