Blog

கோரியொலிஸ் விளைவு – சுழல்

கோரியொலிஸ் விளைவு (Coriolis effect) பற்றி அறிந்துகொள்ள வேண்டிய எளிய பகுதியை பற்றி காண்போம்.

நமது பூமி சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுழல்கிறது, பூமியோடு சேர்ந்து காற்று மண்டலமும். அதனால் தான் ஆகாயத்தில் நேராக வீசப்படும் பந்து நேராக நம்மை நோக்கி வருகிறது. பூமியில் உள்ள காற்று மண்டலமும் பூமிக்கு இணையாக சுழல்கிறது. (உதாரணமாக ‌80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்தில் கொசு நிதானமாக பறப்பதை பார்த்து இருப்பீர்கள், கொசு 80 கிமீ வேகத்தில் பறப்பதில்லை, பேருந்தில் உள்ள காற்று அதோடு சேர்ந்து பயணிப்பதால் தான். ஆனால் பேருந்தின் கூரைக்கு மேலே பறக்க முடியாது, ஏனென்றால் ஒரே காற்று மேலே பயணிப்பதில்லை.

கோரியொலிஸ் விளைவு என்பதை பார்ப்பதற்கு முன்பு இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள். மொழி புரியவில்லை என்றாலும் பரவாயில்லை அதில் காட்டப்படும் காட்சிகள் நன்றாக கவனியுங்கள்.

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி உள்ளீர்களா?, அல்லது உங்கள் ஊர் மளிகைக்கடையில் கடலை எண்ணெய் வாங்கி உள்ளீர்களா? ஏனென்றால் முன்பெல்லாம் எண்ணெய்களை பெரிய புனல் மூலமாக ஊற்றுவார்கள், புனல் வழியாக எண்ணெய் ஊற்றிய பிறகு கீழே இறங்கும் வரை காத்திருப்பார்கள், அப்போது நன்கு கவனித்து இருந்தீர்கள் என்றால் அந்த புனலில் உள்ள எண்ணெய் வலது புறமாக (கடிகார திசை) சுழன்று இறங்குவதை காண முடியும்.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா ஆச்சரியம் அங்குதான் உள்ளது தமிழகத்தில் இருந்து இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்பட்ட சுழற்சியானது இடதுபுறமாக இருந்திருக்கும். நீங்கள் வேறு முறையில் கூட சோதித்துப் பார்க்கலாம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ் பேஷன் வழியாக நீரை நிரப்பி விட்டு கீழே உள்ள அடைத்து வைத்திருக்கும் துளையை திறந்து விடவும், இப்போது நீர்  கீழே இறங்கும், ஆம் ! அது வலதுபுறமாக தான் சுழன்று கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல நம் ஊரில் ஏற்படும் சூறாவளி காற்றுகூட வலதுபுறமாக தான் சுழன்று கொண்டு இருக்கும்.

ஏன் வலதுபுறமாக சுழல்கிறது, இடதுபுறமாக சுழலாதா? எங்கு சூழலும்?

கண்டிப்பாக சுழலும், பூமத்திய ரேகைக்கு கீழ் உள்ள அனைத்து இடங்களிலும் இடதுபுறமாக, அதாவது கடிகாரதிசைக்கு எதிர்திசையில் சூழலும். ஆனால் மத்திய பகுதியில் சுழற்சி ஏற்படாது. (ஆனால் ஒரு சில காலத்திற்கு நேர்மாறாக மேலே இடது புறமாகவும், கீழே வலது புறமாகவும் சுழல்கிறது, தற்போது எந்த திசை என்பதை அறிய வாஸ் ஃபேஷனில் செய்து பாருங்களேன்!!)

Facebook Comments