Blog

“பிலிப்கார்ட்” உருவான கதை

Startup Story of Flipkart in Tamil:

முன்பெல்லாம் நமக்கு ஏதாவது பொருள்கள் தேவைப்பட்டால் கடை கடையாக ஏறி இறங்க வேண்டியது இருக்கும். ஆனால் இப்போதைய தலைமுறையில் இந்த சிக்கல் இல்லை, வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான பொருட்களை இருக்குமிடத்திலிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கதையை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
Sachin bansal and Binny bansal
முதலில் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் யாரென்று பார்ப்போம். சச்சின் பன்சல் (Sachin bansal) மற்றும் பின்னி பன்சல்(binny bansal). இவர்கள் இருவரும் உறவினர்கள் கிடையாது சச்சின் பன்சால் 1971 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார், பின்னி பன்சலும் அங்கே தான் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த இருவரும் JEE என்ற தேர்வை எழுதினார்கள், அதன் பின்பு டெல்லியில் உள்ள ஐஐடியில் சேர்ந்தார்கள். கம்ப்யூட்டர் துறையில் பயின்று, கல்லூரி படிப்பிற்கு பிறகு வெவ்வேறு வேலையில் சேர்ந்து பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.
2006ல் சச்சின் அமேசானில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிக்கு சேர்ந்தார். அதேசமயம் பின்னி கூகுலில் பணியில் சேர்வதற்கான முயற்சி செய்து கொண்டிருந்தார். இரண்டு முறை google ஆல் நிராகரிக்கவும் பட்டார்.
அதன் பின்பு சச்சின் வேலை செய்த அமேசான் கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்தார். இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வேலையை விட்டு வெளியேற நினைத்தார்கள். அமேசானை விட்டு வெளியேறிய இருவரும் Google போன்ற ஒரு சர்ச் இன்ஜினை நிறுவ முடிவு செய்தார்கள்.

பிலிப்கார்ட் (FlipKart):

அந்த சமயத்தில் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் அவ்வளவாக இல்லாததை கவனித்தார்கள். ஆன்லைன் வர்த்தகத்தை தூங்கலாம் என்று முடிவு செய்த பிறகு 2007ல் பெங்களூரில் உள்ள இரண்டு அறை கொண்ட அப்பார்ட்மெண்டில் பிலிப்கார்ட் என்ற நிறுவனத்தை துவங்கினார்கள். அப்போது அவர்களின் முதலீடு வெறும் இரண்டு லட்சம் மட்டுமே. ஆரம்பத்தில் வெறும் புத்தகங்களை மட்டும் அவர்களது இணையதளத்தில் விற்க முடிவு செய்தார்கள்.
Flipkart சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்க இருவரும் வீதியில் இறங்கி நோட்டிஸ் கொடுத்தார்கள், குறிப்பாக புத்தகக் கடையில் இருந்து வெளியே வரும் வாசகர்களிடம் அவர்களது இணையதளம் சம்பந்தமான நோட்டீஸ்களை கொடுத்தார்கள், ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட அவர்களுக்கு முதல் பத்து நாளுக்கு எந்த ஒரு ஆர்டரும் வரவில்லை.
மனம் தளர்ந்த அவர்களுக்கு பதினோராவது நாள் ஒரு புத்தகம் ஆர்டர் செய்யப்பட்டது. “Leaving Microsoft to change the world” ஆம் இதுதான் இவர்களால் முதலில் விற்பனை செய்த புத்தகம். அதன் பிறகு சிறிது சிறிதாக அவர்கள் விற்பனை அதிகரிக்கப்பட்டது சச்சின் மற்றும் பென்சன் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்திலேயே டெலிவரி செய்து கொண்டிருந்தவர்கள். அதன்பிறகு வேறு சில பொருட்களையும் விற்க ஆரம்பித்தார்கள்.
என்னதான் இவர்கள் குறைந்த விலையில் விற்றாலும் உரிய நேரத்தில் கொண்டு போய் சேர்த்தாலும் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள், அது என்ன என்பதை ஆராய ஆரம்பித்த போதுதான் தெரிந்தது ஆன்லைன் தளத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அதன்பிறகு எந்த ஒரு ஆன்லைன் நிறுவனம் அறிவிக்காத ஒரு முறையை இவர்கள் அமல்படுத்தினார்கள், Cash on Delivery வாடிக்கையாளர்கள் பொருளை பெற்ற பிறகு பணத்தை கொடுக்கலாம் என்றார் முறைதான் அது.
தற்போது நிறைய நிறுவனங்களில் அந்த முறை இருந்தாலும் முதலில் அதற்கு விதை போட்டது பிலிப்கார்ட் நிறுவனம். அதன்பிறகு பிலிப்கார்ட் நிறுவனம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. இரண்டு லட்சம் முதலீட்டில் துவங்கிய இந்த நிறுவனம் ஒரே நாளில் ஒரு பில்லியன் பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது, தற்போது 30,000 மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
Facebook Comments