Blog

கூகுள் உருவான கதை

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி தான் செய்த தவறான முடிவால் அந்த நிறுவனத்திற்கு பல லட்சம் டாலர் இழப்பீடு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணிற்கு வேலை பறிபோகும் என்று அறைந்த பெண் தயங்கிக் கொண்டு தனது நிறுவன உரிமையாளரிடம் அதை சொல்ல, அதற்கு உரிமையாளர் அந்த பெண்மணியை திட்டாமல் பாராட்டு அனுப்பிவைத்துள்ளார். மேலும் அதற்கு அவர் சொன்ன காரணம் எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்து தடுமாறி விழுவது மேல். அந்த நிறுவனம் வேறு எதுவும் இல்லை கூகுள்(Google).

Google Story:

இன்று இணையதள சேவையை பயன்படுத்தாதவர் என்று யாரும் கிடையாது. படிக்காதவர் முதற்கொண்டு அவர்களின் ஏதாவது ஒரு தேவைக்காக இணையதள சேவை மையத்தையாவது அணுகுகிறார்கள். 90% இணையதள வாசிகள் முதலில் தேடுவது கூகுள். உங்களுக்குத் தேவையான தகவல்களை இணையதளத்தில் தேடிப் தருவதில் போட்டி இல்லாத ஒரே நிறுவனமான கூகுளின் கதையை பார்ப்போம்.
இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள் லாரி பேஜ் (Larry Page) மற்றும் செர்ஜி பிரின்(Sergey Brin).

Sergey Brin and Larry Page

சிறுவயதிலிருந்தே கனினி சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டார் லாரி பேஜ் அதுமட்டுமில்லாமல் அவரோட தாய் மற்றும் தந்தை இருவரும் கணினித் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. லாரி பேஜ் படித்துக்கொண்டிருந்த காலத்தில் டெஷ்லா (tesla) பற்றிய ஒரு புத்தகம் ஒன்றை படித்தார் ” டெஷ்லா பல அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தாலும் கூட அதை அவருக்கு சரியாக சந்தைப்படுத்துதலில் பிரச்சனை இருந்ததால் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை” இதைப்பற்றி முழுமையாக படித்த லாரி பேஜ் ஒரு நிறுவனத்தை தூங்குவது முக்கியமல்ல அதை சந்தைப்படுத்துவது மிக முக்கியமான விஷயம் என்பதை நன்கு அறிந்து கொண்டார்.
திரு கல்லூரி படிப்பிற்காக பல சாதனையாளர்களை உருவாக்கிய ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் கல்லூரி படிப்பை துவங்கினார், அங்குதான் அவருக்கு கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி அறிமுகமானார், ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லாமல் முரணாகவே இருந்தார்கள். கல்லூரி Project-காக ஒரு தேடல் பொறியை உருவாக்க இருவரும் சேர்ந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இணையதள சேவை என்பது ஆரம்ப கட்டத்தில் இருந்தது. அப்போது யாவும் (Yahoo) மட்டுமே தேடல் சேவையை வழங்கிக் கொண்டு இருந்தது.

Google

லாரியும் செர்ஜியும் தேடலின் தொழில்நுட்பத்தை தாமாகவே உருவாக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களிடத்தில் அவ்வளவு பணம் அந்த சமயத்தில் இல்லாததால் பீட்சா டெலிவரி செய்து அதன்மூலம் சேர்த்த பணத்தை வைத்து சில கம்ப்யூட்டர்களை வாங்கி அவர்களது விடுதி அறையில் தொழில்நுட்பத்தை ஆரம்பித்தார்கள்.
அந்தத் தேடல் என்ஜினிற்கு Googol என்று பெயரிடலாம் என்று முடிவு செய்தார்கள். googol என்பது ஒன்றோடு நூறு பூஜியம்  சேர்ந்தால் எவ்வளவு தொகையை அதை குறிக்கும் சொல், அதாவது அவ்வளவு இணையதளத்தையும் எங்களால் சில நொடிகளிலேயே கண்டுபிடித்து தர முடியும் என்பதற்காக அந்த பெயரை வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஆனால் அதனை பதிவு செய்யும்போது googol என்பதற்குப் பதிலாக google என்று பதிவு செய்துவிட்டார்கள். இருந்தபோதிலும் அது லாரிக்கு மிகவும் பிடித்துவிட்டது.
1998ல்  கூகுளை உருவாக்கி முடித்தார்கள், அதை ஒரு மில்லியன் டாலருக்கும் விற்கலாம் என்ற முற்படும் போது யாரும் அதை வாங்க முற்படவில்லை. அப்போது இருந்த யாகு ஒரு சர்ச் என்ஜினை ஒரு பில்லியன் டாலருக்கு வாங்குவதா என்று புறக்கணித்து விட்டது. சரி என்று இதை ஒரு நிறுவனமாக நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள் லாரி மற்றும் ‌செர்ஜி .
தனக்கு தெரிந்த ஒருவரின் கார் நிறுத்துமிடத்தில் ஆறு பேருடன் துவங்கியது கூகுல்.
1998 ம்‌‌ ஆண்டின் டாப் நூறுக்குல் இடம்பிடித்தது.
1999 செப்டம்பர், ஓராண்டிற்கு உள்ளாகவே 3.5 மில்லியன் தேடல்களுக்கு பதிலளித்திருந்தது. அதுவரை கார்‌ கேரேஜில் இயங்கிக் கொண்டிருந்த கூகுள் நிறுவனம். சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு இடம்பெயர்ந்தது. மீண்டும் யாகூ நிறுவனம் 2002 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலருக்கு விலை பேசியது கூகுளை, ஆனால் கூகுள் நிறுவனம் ஐந்து பில்லியன் டாலருக்கு குறைவாக எங்கள் நிறுவனத்தை தருவதில்லை என்று கூறிவிட்டார்கள், மீண்டும் அதை மறுத்து விட்டது யாகு. ஒருவேளை அன்று விலைபோகியது என்றால் இவ்வளவு பெரிய இணையதள புரட்சி வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்!.

Source: digitalupdates

வளர வளர அவர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்காக விளம்பரங்களை போட ஆரம்பித்தார்கள், ஆனால் அந்த விளம்பரம் பார்ப்பவர்களுக்கு எந்த வகையிலும் எரிச்சலூட்டும் வகையில் இல்லாதவாறு இடம்பெற வேண்டும் என்று நினைத்து அதற்காக AdSense, AdWords போன்றவற்றை உருவாக்கி லாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்தது.
அதன்பின்பு Youtube முதல் ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர் வரை அனைத்தையும் தன் கையில் வைத்துள்ளது கூகுள் நிறுவனம், இணையதள உலகில் போட்டியில்லாத ஒரே நிறுவனம் என்ற உயர்ந்துள்ளது.

Facebook Comments