Blog

விண்வெளி பற்றிய ஒருசில உன்மைகள்

விண்வெளி (Space) மிக அபூர்வமானது. இதில் கோடிக்கணக்கான பொருட்களும் பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் உள்ளன, அதையும் தாண்டி மனித அறிவுக்கு எட்டாத சில மர்மங்களும் உள்ளது. அதில் விண்வெளி பற்றி நாம் அறிந்த சிலவற்றை இங்கு காண்போம்.

1. விண்வெளி அமைதியானது.

விண்வெளியில் காற்று மண்டலம் கிடையாது அதனால் ஒலி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தி செல்ல முடியாது, ஆதலால் விண்வெளி வீரர்கள் ரேடியோ அலைகளை அவர்கள் தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

2. சூரிய குடும்பத்தில் அதிக சூடான கோள் 450°செல்சியஸ்.

சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கோள் வெள்ளி, இதன் தோராயமானது மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ்.‌ இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெள்ளி சூரியனுக்கு மிக நெருக்கமான கோள் கிடையாது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன், புதனில் வளிமண்டலம் இல்லையென்பதால் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளாமல் ஏற்றம் இறக்கமாக இருக்கும்.

3. செவ்வாயில் வாழக் கூடும்.

அனைத்து கோள்களையும் ஒப்பிடும்போது செவ்வாய் மட்டுமே வாழ்வதற்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது, செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா முடியாதா என்ற ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

4. விண்வெளியில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

நமது பால்வெளி அண்டத்தில் மட்டும் 200 லிருந்து 400 பில்லியன் வரை நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது, ஆனால் நட்சத்திர மண்டலங்களே கோடிக்கணக்கில் என்பதால் அவற்றை கணக்கு எடுப்பது மிகவும் கடினம்.

5. நாசாவின் விண்வெளி செல்வதற்கான ஆடையின் மதிப்பு 12 மில்லியன் டாலர்.

6. நியூட்ரான் நட்சத்திரம் நொடிக்கு 600 முறை சுழல்கிறது.

நியூட்ரான் நட்சத்திரம் என்பது மிக அடர்த்தியான மற்றும் மிக சிறிய நட்சத்திரமாக கண்டறியப்படுகிறது, இதன் ஆரம் வெறும் பத்து கிலோமீட்டர் மட்டுமே. இது நொடிக்கு 600 முறை சுழல்கிறது.

7. நிலவில் கால் பதித்த தடம் கோடி கணக்கான வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.

நிலவில் வளிமண்டலம் இல்லை என்பது தெரியும், ஆதலால் அங்கு காற்று அல்லது நீரோ இல்லை என்பதால் காலடி தடம் அழிவதற்கான காரணம் எதுவுமில்லை. ஆதலால் பல கோடி வருடங்களுக்கு மேலாக அந்த பதிப்பு அப்படியே இருக்கும்.

8. வெள்ளியில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட அதிகமானது.

வெள்ளி ஒரு முறை சூரியனை சுற்றிவர 225 நாட்கள் ஆகிறது, ஆனால் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகிறது. அதனால் ஒரு நாள் என்பது அதன்  ஒரு வருடத்தை விட அதிகமானது.

9. விண்வெளி ஒரே மாதிரியான இரண்டு உலோகங்களை வைத்து அழுத்தினால் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும்.

இந்த நம்பமுடியாத உண்மைக்கு பெயர் “Cold welding”. இரண்டு உலோகங்களுக்கிடையே காற்று அல்லது நீரோ இல்லாததால் அந்த இரண்டு ஆட்டம் (Atom) தனித் தனியாக இருப்பது என்பது தெரியாது அதனால் ஒன்றாக வைத்து அழுத்தும் போது நிரந்தரமாக ஒட்டிக்கொள்கிறது. அது பூமியில் இருக்கும் போது இரண்டு உலகங்களுக்கிடையே காற்று இருப்பதால் இரண்டும் தனித்தனியாக உள்ளது.

10. நிலவு பூமியின் ஒரு பகுதி.

ஒரு சில குறிப்புகளின்படி நிலவும் பூமியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது ‌

11. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியனின் நிறை மட்டும் 99.86 %.

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் சூரியனையும் ஒன்றாக சேர்த்தால் அதில் சூரியனின் அளவு மட்டும் 99.86% இருக்கும். பூமியின் நிறைய விட சூரியனின் நிறை 330,000 மடங்கு அதிகம்.

Facebook Comments