Blog

வலைதளம்  எப்படி இயங்குகிறது

நிறைய பேருக்கு சில சந்தேகம் இருந்து இருக்கும் அதில் ஒன்று வலைதளம்  எப்படி இயங்குகிறது (How is working websites) என்று. ஒரு நல்ல வலைதளம்  எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு இணையதளத்தை ஆரம்பிக்கும் போது நமக்கு மூன்று விஷயம் தேவைப்படும்,

1. Domain
2. Hosting
3. Developers/Tools

 Domain

இதை நிறைய இடங்களில் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு பெயர் மட்டுமே (எகா; infee.in)ஆமாம் இதன் பெயர்தான் Domain, ஒரு இணையதளத்தை ஆரம்பிக்கும் பொழுது முதலில் நாம் தேர்வு செய்ய வேண்டியது நாம் அதற்கு வைக்க வேண்டியது பெயர் தான்.

இந்தப் பெயர்(Domain) சாதாரணமாக வருடத்திற்கு 400* ரூபாயிலிருந்து 1,500* ரூபாய் வரை கிடைக்கிறது, இந்தப் பெயருக்கான வாடகையை நீங்கள் வருடம் வருடமோ அல்லது பல வருடங்களுக்கு சேர்த்தோ நீங்கள் வாங்கும் நிறுவனத்திடம் கட்ட வேண்டும்.. ஒருவேளை நீங்கள் உங்கள் டொமைனுக்காண வாடகை செலுத்த தவறிவிட்டால் அடுத்த வருடமே அந்த டொமைன் விற்பனைக்கு வந்துவிடும்.

Hosting

நம் இணையதளத்திற்கு பெயர் வாங்கியாச்சு, அப்படியே விட முடியுமா, அதுக்குனு இருப்பிடம் ஒன்று தேவை அல்லவா!!

Hosting என்பது நம் இணையத்தின்‌ இதய பகுதி, அதாவது நம் இணையத்தில் போடப்படும் தகவல்களை‌ சேகரிக்கும் வாடகை இடம். இங்குதான் நீங்கள் உங்களுக்கு தேவையான Post, video, photo களை சேகரித்து வைக்கலாம், இங்கு சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களை தான் உங்கள் இணையதளத்தில் காட்டும்.

5GB முதல் unlimited சேமிப்பு இடம் கிடைக்கிறது, இதில் உங்களுக்கு தேவையான இடத்தை வாங்கலாம்.

இதன் விலை மாத கட்டுமான *200₹ ல் இருந்து ஆரம்பிக்கிறது..

Developers/tool

Domain, Hosting இது இரண்டும் அனைவருக்கும் பொதுவானது தான் அனைவருக்கும் ஒரே விலைதான். நான் வாங்கிய பெயரையும் இடத்தையும் நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது தான் நமது இணையதளத்தின் தரம் இருக்கும். நமது புகைப்படம் வீடியோ மற்றும் கட்டுரைகளை நாம் எவ்வாறு நாம் இணையதளத்தில் ஒழுங்குபடுத்தி உள்ளோம், எவ்வாறு அது பார்வையாளர்களுக்கு காட்டுகிறது என்பதைப் பொறுத்து தான் உங்கள் இணையதளத்தின் தரம் இருக்கும், தங்கள் இணைய தளம் ஒரு தளத்தை போல் இல்லாமல் தனிதுவமாக இருப்பதற்கான சில நிறுவனங்கள் தனியாக வேலையாட்களை அமர்த்தி டிசைன் செய்வார்கள், ஒரு சிலர் ஏற்கனவே அவர்கள் கொடுத்துள்ள டெம்ப்ளேட்டை பயன்படுத்தி அதில் போஸ்ட் போடுவார்கள்..

தற்போது வலைதளம் ஆரம்பிக்க developer, coding இதெல்லாம் தேவைப்படாது, ஏனென்றால் WordPress Plugin Install செய்து யார்வேண்டுமானாலும் இணையதளத்தை பராமரிக்கலாம்.

Facebook Comments