Blog

“வாட்ஸ்அப்” உருவான கதை

1992ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து ஒருவர் அம்மாவுடன் வேலை தேடி அமேரிக்கா வந்தார், அவர்கள் மாத செலவிற்கு கூட காசு பற்றாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள், படிப்பிற்காக புதிய நோட் புக் வாங்க முடியாமல் ஊரில் இருந்து கொண்டு வந்த தனது பழைய நோட்புக்கையே பயன்படுத்தினார், அரசாங்க மானிய சாப்பாட்டிற்காக நிறைய நாள் தன் அம்மாவுடன் வரிசையில் நின்று உள்ளார். அதே சமயம் இன்னும் ஒருவர்‌ ஒரு முதலீட்டில் தன் பணத்தை இழந்து வேறு பிழைப்பு தேடி கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் வேறு யாரும் இல்லை, இன்று உலகம் முழுவதும் அனைவரின் மொபைல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் “வாட்ஸ்அப்” செயலியின் நிறுவனர்கள்.

Brian Acton and Jan Koum

உக்ரைனில் ஒரு கிராமப்புறத்தில் பிறந்தவர் தான் ஜான், அங்கு அவருக்கு அடிப்படை வசதி இல்லாததாலும், பூச்சியம் டிகிரி செல்சியஸ்ல சுடு தண்ணீர் வசதி கூட இல்லாததாலும் இதற்கு முடிவு கட்ட ஜான் அவரின் அம்மா மற்றும் பாட்டியுடன் அமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியாவில் குடியேற முடிவு செய்தார். அமெரிக்க வந்த பிறகு ஜான் மற்றும் அவங்க குடும்பம் ஒரு சமூக அமைப்போட உதவியுடன் இரண்டு அறை கொண்ட குடியிருப்பில் தங்கி இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் ஜான் அருகில் இருந்த புத்தக கடைகளில் கம்ப்யூட்டர் மெனுவல் வாங்கி கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் பற்றி கற்று கொண்டார். அப்போ அவருக்கு 16 வயது. குடும்ப வறுமையை குறைப்பதற்கு ஒரு கடையில் சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்தார். அதே சமயம் அவருடைய அம்மாவும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் இவங்க ஒரு நடுத்தர வாழ்க்கைய வாழ முடிந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருக்கும் போது ஒரு அதிர்ச்சி. அவரோட அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் ஜான்னோட துணிச்சல் மற்றும் முன்னேற்றம் அடையனும் என்ற எண்ணம் அவரை அனைத்தையும் தாங்கி கொள்ள வைத்தது. அடுத்த இரண்டு வருடங்கள் கடுமைய உழைத்து கம்யூட்டர் நெட்வொர்க்கிங் பற்றி முழுமையாக கற்றுக்கொண்டார். அப்போதான் அவருக்கு புரோகிராமிங்ல நாட்டம் இருப்பது தெரிந்து SAN JOSE STATE UNIVERSITYல பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் செக்யூரிட்டி டெஸ்ட்டராகவும் வேலை பார்த்தார்.

Yahoo:

ஒரு ஆறு மாத முடிவிலேயே ஜானிற்கு‌ யாகு(Yahoo)ல Infrastructure Engineer ஆக வேலை கிடைத்தது, அந்த சமயம் யாகு ஒரு புதிய நிறுவனமாக தான் இருந்தது. ஆனால் யாகுவின் மதிப்பை அறிந்து தான் பயின்று கொண்டு இருந்த புரோகிராமிங் வகுப்பை கைவிட்டு யாகுவில் முழு நேர வேலையில் ஈடுபட்டார். ஆனால் இந்த சந்தோஷமும் கூட ரொம்ப நாள் நீடிக்கவில்லை, ஜானோட அம்மா 2000ல இறந்து போக ஜான் அதிக துக்கத்தில் இருந்தார், இந்த சமயத்தில் தான் அவரோட நன்பர் பிரைன் ஆக்டன் அவரோட வீட்டுக்கு கூட்டி சென்று ஆறுதல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வைத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து யாகுவில் ஒன்பது வருடமும் கடுமையாக உழைத்தார்கள்.

Whatsapp:

அந்த சமயத்தில் ஜான் ஒரு ஐ-போன் வாங்கினார், அதில் ஆப் (App) ஸ்டோரில் புதிய புதிய ஆப்கள் வருவதை கவனித்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு புதிய ஆப் கண்டுபிடிக்கலாம் என்று மற்றும் அதற்கு மூன்று நிபந்தனைகளை முன்னரே முடிவு செய்தார்

1. செயலியில் விளம்பரங்கள் வரக்கூடாது

2. நல்ல சேவை

3. தகவல் பாதுகாப்பு

இந்த வேலை அனைத்தும் முடிந்த பிறகு 2009 ல் ஜான் தனது பிறந்த நாள் அன்று “WhatsApp” என்ற பெயரில் வெளியிட்டார். நல்லா சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சல் அடைந்த ஜான் இதை கைவிடும் நிலைக்கு வந்தார், அவரது நண்பர் பிரைன் அவரை ஊக்கப்படுத்தி மீண்டும் முயற்சிக்க செய்தார். பண உதவிகள் செய்து இணை நிறுவனர் என்ற அந்தஷ்த்தையும் பெற்றார்.  அந்த சமயத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் ஒரு உதவி கிடைத்தது, புஷ் நோட்டிபிகேஷனை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அதன்பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகு 2014ம்‌ ஆண்டு வாட்ஸ்அப் எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் அசுர வளர்ச்சி அடைந்து.

Source : blog.whatsapp

இதை கவனித்த பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் வாங்க முடிவு செய்தது. 2014 பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் நிறுவனத்திலிருந்து பேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது. ஜான் பேஸ்புக்கிற்கு கையெழுத்து போட்ட இடம் ஒரு ஆள் இல்லாத கட்டிடம் “தன் அம்மாவுடன் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் அரசு மானிய சாப்பாட்டிற்காக வரிசையில் நின்ற இடம்” கூடவே அவருக்கு பேஸ்புக் நிறுவனத்தில் போர்ட் நம்பர் ஆகவே வாய்ப்பு கிடைத்தது.

Facebook Comments